ADDED : பிப் 23, 2026 06:36 AM
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி, 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்-படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவித்து வரு-கிறது.
கடந்த 1ல், முட்டை கொள்முதல் விலை, 525 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து, 540 காசாக நிர்-ணயம் செய்யப்பட்டது. கடந்த, 17ல், 20 காசு சரிந்து, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்-நிலையில், நேற்று மாலை, நெக் நாமக்கல் மண்-டல தலைவர் சிங்க ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முட்டை விலையை, மேலும், 20 காசு குறைத்து, 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்-டது. இதேபோல், கறிக்கோழி ஒரு கிலோ, 116 ரூபாய், முட்டைக்கோழி ஒருகிலோ, 62 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.
