ADDED : ஜன 26, 2026 07:04 AM
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி, 6 கோடி முட்டை உற்-பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கி-ணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை அறிவிக்கிறது.
அதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வரு-கின்றனர். கடந்த, 1ல், 640 காசாக நிர்ணயம் செய்-யப்பட்ட கொள்முதல் விலை, படிப்படியாக சரிந்து, 19ல், 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்-டது.
இந்நிலையில், கடந்த, இரண்டு நாட்களில், 10 காசு அதிகரித்து, 510 காசுக்கு விற்பனை செய்யப்-பட்டது. நேற்று மேலும், 5 காசு உயர்த்தி, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 3 நாட்-களில், 15 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசு-களில்) நிலவரம்: சென்னை, 550, ஐதராபாத், 485, விஜயவாடா, 510, பர்வாலா, 485, மும்பை, 545, மைசூரு, 560, பெங்களூரு, 560, கோல்கட்டா, 545, டில்லி, 520 என, நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, முட்டைக்கோழி, 72 ரூபாய்க்கும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கி-ணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, கறிக்-கோழி, 133 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்-டது.

