/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு
/
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு
ADDED : மே 03, 2024 07:24 AM
நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும், 20 காசு உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை, 460 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.,), தினமும் பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த மாதம் 22ம் தேதி ஒரு முட்டை விலை, 410 காசுகளக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஒரு வாரமாக முட்டை விலை மாறுதல் இல்லாமல் நீடித்து வந்தது. 29ம் தேதி முட்டை விலை, 5 காசு உயர்ந்து, 415 காசுகளாக உயர்ந்தது. 30ம் தேதி, 420 காசுகளானது. நேற்று முன்தினம், 20 காசு உயர்ந்து, 440 காசாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், முட்டை விலை மீண்டும், 20 காசு உயர்த்தப்பட்டு ஒரு முட்டை பண்ணை கொள்முதல் விலை, 460 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை, 4 நாட்களில் 50 காசு உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (காசு) : சென்னை, 460, பர்வாலா, 395, பெங்களூரு, 470, டெல்லி, 410, ஐ தராபாத், 400, மும்பை, 455, மைசூரு, 475, விஜயவாடா, 385, ஹொஸ்பேட், 425, கோல்கட்டா, 440.பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ, 124 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ, 90 ரூபாயாக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.