ADDED : டிச 14, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவான நெக் நிர்ணயிக்கிறது.
நவ., 21ல், ஒரு முட்டை, 610 காசாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 5 காசு உயர்ந்து, 615 காசாக புதிய உச்சம் தொட்டது.
நேற்று மேலும், 5 காசு அதிகரித்து, 620 காசாக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது.

