/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
13 நாட்களுக்கு பின் முட்டை விலை சரிவு
/
13 நாட்களுக்கு பின் முட்டை விலை சரிவு
ADDED : ஜன 05, 2026 05:48 AM
நாமக்கல்: தொடர்ந்து உயர்வில் நீடித்த முட்டை கொள்முதல் விலை, 13 நாட்களுக்கு பின்னர் நேற்று, 20 காசு குறைந்தது.
நாமக்கல் மண்டலத்தில், தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை கொள்முதல் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவான ' நெக ் ' அறிவிக்கிறது.
கடந்த ஆண்டு, நவ., 15ல், முட்டை வரலாற்றில் புதிய உச்சமாக, கொள்முதல் விலை, 595 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து, 2025 டிச., 22ல், 640 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
அன்று முதல், 13 நாட்களாக அதே விலையில் நீடித்து வந்த நிலையில், நேற்று திடீரென, 20 காசு குறைக்கப்பட்டு, 620 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு முடிந்ததை அடுத்து, முட்டை நுகர்வு சரிந்துள்ளது. இதனால், கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ முட்டைக்கோழி, 90 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 142 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி சில்லறை விலையில், கிலோ 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

