ADDED : பிப் 28, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை, 490 காசாக இருந்து வந்தது. இதற்கிடையே, நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 30 காசு குறைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, முட்டை கொள்முதல் விலை, 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி ஒரு கிலோ, 84 ரூபாய், முட்டைக்கோழி ஒரு கிலோ, 65 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் காரணமாக, முட்டை விற்பனை மந்தமானது. இதனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து வியாபாரிகள், 30 காசு வரை குறைத்தே முட்டையை கொள்முதல் செய்து வந்தனர். இதை தடுக்கவே விலை குறைக்கப்பட்டிருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.