தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முட்டை விலை மீண்டும் சரிவு

முட்டை விலை மீண்டும் சரிவு

முட்டை விலை மீண்டும் சரிவு


ADDED : மே 29, 2024 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் : நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது.

அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 540 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வடமாநிலத்தில் குறைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை சரிவடைந்துள்ளது. மூன்று நாட்களில், 60 காசு குறைந்துள்ளது பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 600, ஐதராபாத், 510, விஜயவாடா, 485, பர்வாலா, 430, மும்பை, 590, மைசூரு, 585, பெங்களூரு, 585, கோல்கட்டா, 545, டில்லி, 460 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 103 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, 5 ரூபாய் குறைத்து, ஒரு கிலோ, 98 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 147 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையை, எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us