/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
/
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
ADDED : மார் 29, 2025 07:23 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 425 காசுக்கு விற்ற முட்டை விலை, 25 காசு உயர்த்தி, 450 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடும் வெயில் காரணமாக உற்பத்தி சரிந்துள்ளது. அதே சமயம், நுகர்வு அதிகரித்துள்ளதால், இரண்டு நாட்களில், 35 காசு உயர்ந்துள்ளது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 480, ஐதராபாத், 415, விஜயவாடா, 440, பர்வாலா, 378, மும்பை, 470, மைசூரு, 470, பெங்களூரு, 470, கோல்கட்டா, 490, டில்லி, 395 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கி-ணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 77 ரூபாய்க்கு விற்ற முட்-டைக்கோழி விலையிலும்; பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 101 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயிக்கப்பட்டது.