/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முட்டை உற்பத்தி 20 சதவீதம் சரிவு 12 நாளில் கொள்முதல் விலை 'கிடுகிடு'
/
முட்டை உற்பத்தி 20 சதவீதம் சரிவு 12 நாளில் கொள்முதல் விலை 'கிடுகிடு'
முட்டை உற்பத்தி 20 சதவீதம் சரிவு 12 நாளில் கொள்முதல் விலை 'கிடுகிடு'
முட்டை உற்பத்தி 20 சதவீதம் சரிவு 12 நாளில் கொள்முதல் விலை 'கிடுகிடு'
ADDED : மே 07, 2025 02:05 AM
நாமக்கல்:
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 500 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 505 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை, 12 நாட்களில், ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், ''வழக்கமாக கோடையில் முட்டை உற்பத்தி சரிவது வழக்கம். அதற்கு காரணம், 105 கிராம் தீவனம் எடுத்துக்கொள்ளும் கோழி, தற்போது, 90 கிராமிற்கு கீழ் எடுத்துக்கொள்கிறது. அதனால், 20 சதவீதம் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதை ஈடுசெய்ய, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சத்தணவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, தமிழகம், கேரளாவில் நுகர்வு அதிகரித்துள்ளது. அதனால், கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது,'' என்றார்.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 560, ஐதராபாத், 475, விஜயவாடா, 500, பர்வாலா, 484, மும்பை, 540, மைசூரு, 545, பெங்களூரு, 525, கோல்கட்டா, 530, டில்லி, 510 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 2 ரூபாய் உயர்த்தி, 101 ரூபாய் என, விலை நிர்ணயம்
செய்யப்பட்டது.