/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முட்டை விற்பனை விலை: இன்று முதல் நாமக்கல்லில் இருந்து அறிவிக்க தீர்மானம்
/
முட்டை விற்பனை விலை: இன்று முதல் நாமக்கல்லில் இருந்து அறிவிக்க தீர்மானம்
முட்டை விற்பனை விலை: இன்று முதல் நாமக்கல்லில் இருந்து அறிவிக்க தீர்மானம்
முட்டை விற்பனை விலை: இன்று முதல் நாமக்கல்லில் இருந்து அறிவிக்க தீர்மானம்
ADDED : டிச 09, 2024 07:10 AM
நாமக்கல்: 'முட்டை விற்பனை விலை, இன்று (டிச., 9) முதல், நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத்திலிருந்து அறிவிக்கப்படும்' என, 'நெக்' அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (நெக்) மண்டல நிர்வாகிகள் அவசர கூட்டம், நாமக்கல்லில், நேற்று நடந்தது. நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், முட்டை விற்பனை நன்றாக இருந்தும், 'நெக்' சிபாரிசு செய்யும் பண்ணை கொள்முதல் விலைக்கும், வியாபாரிகள் பண்ணையாளரிடம் வாங்கும் விலைக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இருப்பது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
தொடர்ந்து, சிபாரிசு செய்யும் பண்ணை கொள்முதல் விலைக்கும், வியாபாரிகள் வாங்கும் விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைக்கும் வகையில், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், 50 லட்சம் முட்டைகள், 570 காசுக்கு நாளை (இன்று) முதல் வாங்கப்படுகிறது. இவ்வாறு வாங்கும் முட்டைகள், வட மாநிலத்திற்கு பாக்ஸ் போட்டு அனுப்பப்படும். முட்டைகள் 'நெக்' அறிவிக்கும் விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை அடையும் நோக்கில், முதல் படியாக, 7 வட்டாரக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அந்தந்த பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்புக்குழு, தினமும் மாலை, 7:00 மணிக்கு கலந்துபேசி, அடுத்த நாளுக்கான விற்பனை விலையை முடிவு செய்து, பரிந்துரையை நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்க தலைவருக்கு (அடுத்த நாளுக்கான விற்பனை விலையை) பரிந்துரை செய்வர். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட விற்பனை விலையை, வியாபாரிகள் சங்க தலைவர், 'நெக்' தலைவருடன் பேசி, அவரின் ஒப்புதலுடன் மறுநாள், 7:00 மணிக்கு, அனைத்து பண்ணையாளர்களையும் அடையும் வகையில், முட்டை விற்பனை விலை, இன்று (டிச., 9) முதல் நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத்திலிருந்து அறிவிக்கப்படும்.
அனைத்து பண்ணையாளர்களும், முட்டை வியாபாரிகள் சங்கத்திலிருந்து அறிவிக்கப்படும் விற்பனை விலைக்கு குறையாமல், முட்டையை விற்பனை செய்ய வேண்டும். வரும், 21ல், நெக் சார்பில், பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும். முட்டை ஓடு வீக்காக உள்ள முட்டைகள் மட்டுமே, சந்தையில் உற்பத்தி விலை, விற்பனை விலை இடையே உள்ள வித்தியாசம் அதிகம் போவதற்கு ஒரு காரணமாக உள்ளது. அதனால், 90 வாரங்களுக்கு மேற்பட்டுள்ள முட்டை கோழிகளை உடனடியாக பிடித்தால் மட்டுமே இந்த பிரச்னையை தீர்க்க முடியும். வயது முதிர்ந்த, 90 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிகளை, உடனடியாக பிடிக்க வேண்டும். முட்டை விலை நிர்ணயம் மேலும் செம்மைப்படுத்த, முட்டை விலை நிர்ணய குழுவை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.