/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரூரில் பால் பண்ணை அதிபரை கடத்த முயன்ற எட்டு பேர் கைது
/
கரூரில் பால் பண்ணை அதிபரை கடத்த முயன்ற எட்டு பேர் கைது
கரூரில் பால் பண்ணை அதிபரை கடத்த முயன்ற எட்டு பேர் கைது
கரூரில் பால் பண்ணை அதிபரை கடத்த முயன்ற எட்டு பேர் கைது
ADDED : ஜூலை 22, 2025 02:12 AM
கரூர், கரூரில், பால் பண்ணை அதிபரை கடத்த முயன்ற, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா பழனிசாமி, 78; பால் பண்ணை அதிபர். இவர் கடந்த பிப்ரவரி மாதம், 21ம் தேதி அதிகாலை நடை பயிற்சிக்கு சென்ற போது, மர்ம நபர்கள் இவரை காரில் கடத்த முயன்றனர். அப்போது, தப்பி ஓடிய ராஜா பழனிசாமி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த, 18ம் தேதி அதிகாலை கரூர் கவுரிபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் மாரி முத்து, 75, என்பவரை அவருடைய மாருதி ஆம்னி காரில் ஒரு கும்பல் கடத்தி சென்று, மாங்காசோளிப்பாளையத்தில் காலி இடத்தில் கட்டி போட்டனர். பிறகு, மாரிமுத்துவின் மாருதி ஆம்னி காரை கடத்தி கொண்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக, மாரிமுத்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கடத்திய கும்பல் கன்னியாகுமரியில் இருப்பதாக வந்த தகவல்படி, கரூர் டவுன் போலீசார் கன்னியாகுமரிக்கு சென்று எட்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பணம் பறிக்க, பால் பண்ணை அதிபர் ராஜா பழனிசாமியை கடத்தியது, இந்த கும்பல் தான் என தெரியவந்தது.
இதையடுத்து, கன்னியாகுமரியை சேர்ந்த பகவதி நாராயணன் ராஜா, 24, மாரிமுத்து, 30, விக்னேஷ்வரன், 19, முத்துக்குமார், 19, சுரேஷ், 19 மற்றும் 18 வயது சிறுவர்கள் மூவர் என எட்டு பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரித்தனர். பிறகு, எட்டு பேரையும் நேற்று கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்றத்தில் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன் ஆஜர்ப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
அதில், பகவதி நாராயணன் ராஜா, கடந்த சில மாதங்களுக்கு முன், ராஜா பழனிசாமியின் பால் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, ராஜா பழனிசாமியிடம் பணம் புழக்கம் அதிகம் இருந்ததால், பணம் பறிக்கும் நோக்கத்தில், அவரை பகவதி நாராயணன் ராஜா, கடத்த முயன்றதாக கரூர் டவுன் போலீசார், நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுரேஷ் என்பவர் மீது மூன்று வழக்குகளும், முத்துக்குமார், விக்னேஷ்வரன் ஆகியோர் மீது கொலை வழக்கும், மாரிமுத்து என்பவர் மீது மூன்று வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.