sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழகத்தின் 3வது பாரம்பரிய உயிரி பல்வகை தலம் எலத்துார் குளம் 204 பறவைகள், 174 வகை பூச்சிகள், 228 தாவரங்கள் வாழ்விடம்

/

தமிழகத்தின் 3வது பாரம்பரிய உயிரி பல்வகை தலம் எலத்துார் குளம் 204 பறவைகள், 174 வகை பூச்சிகள், 228 தாவரங்கள் வாழ்விடம்

தமிழகத்தின் 3வது பாரம்பரிய உயிரி பல்வகை தலம் எலத்துார் குளம் 204 பறவைகள், 174 வகை பூச்சிகள், 228 தாவரங்கள் வாழ்விடம்

தமிழகத்தின் 3வது பாரம்பரிய உயிரி பல்வகை தலம் எலத்துார் குளம் 204 பறவைகள், 174 வகை பூச்சிகள், 228 தாவரங்கள் வாழ்விடம்


ADDED : செப் 06, 2025 01:53 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர் ;ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் உள்ள எலத்துார் குளம், தமிழக அரசால் பாரம்பரிய உயிரி பல்வகைமை தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலையுதிர் முட்புதர் காடு, கரைக்காடு, வறல் புல்வெளி, சதுப்பு நிலம், பாறை பகுதிகள் நிறைந்த நீர்வழித்தடம், ஆழமான நீர்நிலைப்பகுதி, ஆழம் குறைந்த நீர்ப்பகுதி, மண் மற்றும் மணல் திட்டு, ஏரிக்கரை என வாழ்விடங்கள் நிறைந்துள்ளதால், எலத்துார் குளம் பல்லுயிர் செறிவுமிக்க இடமாக விளங்குகிறது.

இங்கு இதுவரை, 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதில், 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், எட்டு பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்ளடங்கும். இங்கு, 200க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் வாழ்கின்றன.

இதில், 79 வலசை பறவைகளும், 125 உள்ளூர் பறவைகளும் அடங்கும். இத்துடன் பல உயிரினங்கள் வாழும் சிறந்த உயிர்ச் சூழலை பெற்றுள்ளது. 37 ஹெக்டேருக்கு மேல் உள்ள எலத்துார் குளத்தில், 72 வகை உள்ளூர் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இதில்லாமல் இக்குளமானது சுற்றியுள்ள பல கிராமங்களின் நீராதாரமாகவும் திகழ்கிறது. உள்ளூர் சூழலை மேம்படுத்தவும், விளைநிலங்களின் வளத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உள்ளூர் தட்பவெட்ப நிலையை சீராக வைக்க உதவும் எலத்துார் குளமானது, பறவைகள் காண்பதற்கும் சுற்றுச்சூழல் குறித்து கற்பதற்கும் முக்கிய இடமாக விளங்குகிறது. இத்துணை உயிர்ச்சூழல் நிறைந்த வாழ்விடத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாரம்பரிய உயிரிப் பல்வகைமை தலமாக உயிரி பல்வகைமை சட்டம்-2002ன் கீழ் அரசு அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us