ADDED : செப் 17, 2024 07:38 AM
அ நிறம் | அளவு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை - புதுப்பட்டி சாலையில் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் உள்ள முள்காட்டில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக, நேற்று அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தேவஸ்தானம் புதுார் பகுதியை சேர்ந்த லட்சுமணன், 80, என்பது தெரியவந்தது.
மனநிலை பாதிக்கப்பட்ட அவர், வீட்டை விட்டு அடிக்கடி சென்றுவிடுவாராம். நேற்று முன்தினம், முள் காட்டிற்கு சென்ற முதியவர் இறந்துள்ளார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
