நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் உயிரிழப்பு
புதுச்சத்திரம், டிச. 15-
புதுச்சத்திரம் யூனியன் உடுப்பம் சாலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சாலையில் மயங்கிய நிலை யில் கிடந்தார். அந்த வழியாக சென் றவர்கள், '108' அவசரகால ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், முதி யவரை பரிசோதனை செய்தனர். அப்போது, முதியவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இவர் யார்? எந்த ஊர்? போன்ற விபரங்கள் குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.