/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவியாக உடன் வாழ்ந்தவரை வெட்டிக்கொன்ற முதியவர் கைது
/
மனைவியாக உடன் வாழ்ந்தவரை வெட்டிக்கொன்ற முதியவர் கைது
மனைவியாக உடன் வாழ்ந்தவரை வெட்டிக்கொன்ற முதியவர் கைது
மனைவியாக உடன் வாழ்ந்தவரை வெட்டிக்கொன்ற முதியவர் கைது
ADDED : ஜூலை 09, 2025 02:03 AM
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகே, வேறொருவருடன் தொடர்பில் இருந்த, 3வது மனைவி போல் வாழ்ந்தவரை வெட்டிக்கொன்ற முதியவரை, போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கே.சவுளூரை சேர்ந்தவர் காவேரி, 70, விவசாயி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருடன் திருமணமாகி கடந்த, 1996ல் விவாகரத்து ஆனது. இதையடுத்து கோவிந்தம்மாளின் அக்கா மங்கம்மாள், 70, என்பவரை கடந்த, 1997ல் 2வதாக திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களிலேயே அவரும் காவேரியை பிரிந்து சென்றார்.
இதையடுத்து, துடுக்கனஹள்ளியை சேர்ந்த கோவிந்தம்மாள், 45, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, திருமணம் செய்யாமல், தன் வீட்டில் மனைவி போல் வைத்து வாழ்ந்து வந்தார். கோவிந்தம்மாளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன், துடுக்கனஹள்ளியை சேர்ந்த தங்கராஜ், 35 என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.இதை, காவேரி கண்டித்தும் அவர், தங்கராஜூ உடனான தொடர்பை கைவிடவில்லை. இது தொடர்பாக நேற்று மாலை ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த காவேரி, கோவிந்தம்மாளை அரிவாளால் வெட்டி கொன்றார். காவேரிப்பட்டணம் போலீசார், கோவிந்தம்மாளின் சடலத்தை மீட்டு, காவேரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.