/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி
/
சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி
சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி
சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலி
ADDED : அக் 21, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலியானார்.
குமாரபாளையம், தெற்கு காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 78; தனியார் நிறுவன வாட்ச்மேன்.
இவர், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு, பள்ளிப்பாளையம் சாலையில் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதால், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு அவர் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.