/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டுக்குள் புகுந்தது சுவர் விழுந்து முதியவர் பலி; 2 பேர் படுகாயம்

ADDED : ஜூலை 23, 2025 02:12 AM
திருச்செங்கோடு திருச்செங்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தது. இதில், காம்பவுண்ட் சுவர் சரிந்து, வாசலில் அமர்ந்திருந்த முதியவர் பலியானார்.
திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ண சுவாமி கோவிலிற்கு சுவாமி கும்பிட, ஐந்துபேர், 'சைலோ' காரில் புறப்பட்டனர். இரவு தரிசனத்தை முடித்துக்கொண்டு, திருச்செங்கோட்டில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு அரியமங்கலம் திரும்பிக்கொண்டிருந்தனர். திருச்செங்கோடு-நாமக்கல் சாலை, உஞ்சனை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, ஸ்பிளண்டர் மற்றும் டி.வி.எஸ்., எக்ஸல் மொபட் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து சென்றது.
சிறிது துாரத்தில் இருந்த, முருகேசன் என்பவரின் வீட்டு காம்பவுன்ட் சுவரை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் போய் நின்றது. இந்த விபத்தில், வீட்டு வாசலில் சேரில் அமர்ந்திருந்த முருகேசன், 67, என்பவர் மீது காம்பவுண்ட் சுவர் சரிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கார் டிரைவர் யுவராஜன், 42, மற்றும் இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்த சரவணன், 30, ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த, மூன்று பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.