/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு
/
அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு
ADDED : அக் 13, 2024 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 74. இவர், நேற்று வெண்ணந்துார் அருகே அத்தனுார் அடுத்த தாளம்பள்ளம் பகுதியில், சேலம்- - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், சின்னசாமி மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெண்ணந்துார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், விபத்துக்கு காரணமான, நாமக்கல் அடுத்த பெரியபட்டியை சேர்ந்த
அரசு பஸ் டிரைவர் செல்வராஜ், 55, கைது செய்தனர்.