/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் தொய்வு
/
பள்ளிப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் தொய்வு
ADDED : ஏப் 04, 2024 04:36 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காடு, பெரியார் நகர், ஆண்டிக்காடு, முனியப்பன் நகர், பெரியகாடு, காவிரி, வசந்தநகர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பங்குனி மாதம் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது, கோவில் பண்டிகை பள்ளிப்பாளையம் பகுதி முழுதும் நடப்பதால், பொதுமக்கள் கோவில் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த சமயத்தில் தேர்தல் பிரசாரம் செய்தாலும் மக்களிடம் எடுபடாது. மக்களையும் சந்திக்க முடியாது. இந்த வாரம் முழுதும் கோவில் திருவிழா நடப்பதால், தேர்தல் பிரசாரம் தொய்வு நிலையில் காணிப்படுகிறது. மீண்டும் வரும் திங்கட்
கிழமை முதல் மீண்டும் தேர்தல் பிரசாரம் தீவிரமாகும்.

