நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய தலைவர் தேர்வு
பள்ளிப்பாளையம், டிச. 12-
பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு நகராட்சி துவக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக சங்க கூட்டம், நேற்று நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலமுருகன், தலைமை ஆசிரியர் லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக மகுடேஸ்வரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

