ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
ராசிபுரம்: அம்பேத்கர் கட்டட தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியில் தமிழக பாரத ரத்னா கட்டட தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் ராம்ஜி, பொதுச்-செயலாளர் தர்மன், ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட செயலாளராக பாரதிராஜா ஒரு-மனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று ஒரே நாளில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இச்சங்கத்தில் தங்களை உறுப்பின-ராக இணைத்துக்கொண்டனர். சங்க உறுப்பினர்களை அதிகளவு இணைப்பது, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கு தகுதியான நலத்திட்ட உதவிகளை பெற்று தருவது, ஓய்வூதியம் புதுப்பிக்கும் முறை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.