/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட மின் மயானம் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
/
எருமப்பட்டியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட மின் மயானம் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
எருமப்பட்டியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட மின் மயானம் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
எருமப்பட்டியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட மின் மயானம் பயன்பாட்டிற்கு திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 16, 2025 02:05 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 1.50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மின் மயானத்தை பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், இப்பகுதியை சுற்றிலும், 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் இயற்கை மரணம், விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தால், அவர்களை எரியூட்டுவதற்காக மின் மயானம் இல்லாமல் இருந்தது. இதனால், இங்குள்ள மக்கள், 15 கி.மீ., துாரத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம் மின் மயானத்திற்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, உயிரிழந்தவர்களை எரியூட்டுவதற்காக, எருமப்பட்டியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, எருமப்பட்டி சந்தைப்பேட்டை மயானத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மின் மயானம் கட்டும் பணி, கடந்த, 2023ல் துவங்கியது. இப்பணி கடந்த, எட்டு மாதங்களுக்கு முன் முடிந்தது. இந்நிலையில், மின் மயானத்தை டவுன் பஞ்., நிர்வாகம் தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து, முறையாக பராமரிப்பு செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, எருமப்பட்டியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம், இந்த மின் மயனத்தை எடுத்து நடத்த ஒப்புக்கொண்டது.
ஆனால், மின் மயானத்தை தனியார் வசம் ஒப்படைத்தால், ஏழை மக்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் பாகுபாடு பார்க்கப்படும் என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதனால், இந்த மின் மயானம் கட்டப்பட்டதுடன் பயன்பாட்டிற்கு வராமல், 10 மாதங்களாக மூடியே வைக்கப்பட்டுள்ளது. எனவே, பயன்பாட்டிற்கு வராத இந்த மின்மயானத்தை அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.