/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானியத்துக்கு ஒப்புதல் தராததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 'லாக்' ஓலா நிறுவனம் மீது ரூ.100 கோடி கேட்டு நாமக்கல்லில் வழக்கு

ADDED : பிப் 18, 2025 07:19 AM
நாமக்கல்: 'விற்பனை செய்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 'லாக்' செய்த, ஓலா நிறுவனம், 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்-டுள்ளது.நாமக்கல்லை சேர்ந்தவர் சுதேஸ்வரன், 27; கடந்த, 2024 செப்டம்பரில் ஆன்லைனில் 'ஓலா' எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, 87,548 ரூபாய்க்கு பதிவு செய்தார். வாகனத்தை பெற்றுக்கொள்ள ஷோரூம் சென்றார்.
இன்சூரன்ஸ், டெலிவரி கட்டணம், 4,280 ரூபாயை செலுத்தி நவம்பரில் பெற்றார். கடந்த பிப்.,5ல் நாமக்கல் 'ஓலா' ஷோரூமில் இருந்து, 'எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்-கான மத்திய அரசின் மானியத்தொகை, 10,000 ரூபாய் பெற நேரில் வந்து போட்டோ எடுத்து ஒப்புதல் வழங்க வேண்டும்' என அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஷோரூமுக்கு சென்று விபரம் கேட்டபோது, 'மானியத்தொகை கம்பெனிக்கு கிடைக்க கூடியது. உங்களுக்கு கிடையாது' என தெரிவித்துள்ளனர்.வாகனத்தை பெறும்போது இதுகுறித்து எதுவும் தெரிவிக்க-வில்லை என்று கூறி, ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார். மறுநாள் சென்சார் கட்டுப்பாடு மூலம் ஓலா நிறுவனத்தினர் வண்-டியை 'லாக்' செய்துவிட்டனர். நாமக்கல் ஷோரூமில் தெரி-வித்தும், 'அன்லாக்' செய்ய மறுத்து விட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுதேஸ்வரன், ஐந்து லட்சம் ரூபாய் இழப்-பீடு கேட்டு, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில், நேற்று வழக்கு தாக்கல் செய்தார். மேலும், தம்மைபோல் பாதிக்கப்பட்ட அடை-யாளம் தெரியாத ஆயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கு இழப்பீ-டாக, 100 கோடி ரூபாயை 'ஓலா' நிறுவனம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.வழக்கை விசாரணைக்கு எடுத்துக்-கொண்ட நுகர்வோர் நீதிமன்றம், 48 மணி நேரத்தில், 'சென்சார் லாக்'கை நீக்க உத்தரவிட்டது. மேலும் 'பிளிப்கார்ட், ஓலா நிறு-வனம் மற்றும் குமாரபாளையம், நாமக்கல் ஓலா நிறுவன கிளைக-ளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.