/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழைக்காலத்தில் மின் பாதுகாப்பு; மேற்பார்வை பொறியாளர் அறிவுரை
/
மழைக்காலத்தில் மின் பாதுகாப்பு; மேற்பார்வை பொறியாளர் அறிவுரை
மழைக்காலத்தில் மின் பாதுகாப்பு; மேற்பார்வை பொறியாளர் அறிவுரை
மழைக்காலத்தில் மின் பாதுகாப்பு; மேற்பார்வை பொறியாளர் அறிவுரை
ADDED : அக் 16, 2024 07:24 AM
நாமக்கல்: மழைக்காலத்தில் பொதுமக்கள் பின்பற்றப்பட வேண்டிய மின் பாதுகாப்பு குறித்து, நாமக்கல் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்மான பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவை அருகே செல்லக்கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்துவிழும் மேல்நிலை மின்சார கம்பிகள் அருகே செல்லக்கூடாது. அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் செல்லக்கூடாது. இடி, மின்னலின் போது குடிசை வீடு, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்கூடையின் கீழே நிற்க வேண்டாம். இடி, மின்னலின் போது மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சம் அடைய வேண்டும்.
இடி, மின்னலின் போது மின் உபகரணங்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும். தண்ணீர் அல்லது நீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகளை இயக்கவோ, அணைக்கவோ கூடாது. ஸ்டே கம்பி அல்லது மின் கம்பங்களில் கொடி கயிறு கட்ட வேண்டாம். மேலும், ஸ்டே கம்பிகளில் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களை கட்ட வேண்டாம். பொதுமக்கள் மின் வினியோகம் சார்ந்த குறைபாடுகளை தெரிவிக்க, சரி செய்ய, 24 மணிநேரமும் செயல்படும், 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.