/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்வாரிய சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 30, 2025 01:11 AM
நாமக்கல், ஏப். 30
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில், நாமக்கல் -திருச்செங்கோடு சாலையில் செயல்படும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு எலக்ட்ரி சிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாநில துணைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
அதில், ஓய்வுபெற்ற ஆண்டிற்கான பணியாளர்கள், 47 பேருக்கு, 2023---24ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள், 19 பேருக்கு இறுதிகால பயன்கள் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இருவருக்கு, சி.பி.எஸ்., தொகை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.