பருவ மழையில் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம் எச்சரிக்கை
பருவ மழையில் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம் எச்சரிக்கை
ADDED : அக் 18, 2026 06:12 AM
நாமகிரிப்பேட்டை:வடகிழக்கு
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பல்வேறு
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை மின்வாரியம்
வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது வடகிழக்கு பருவமழை
தொடங்கியுள்ள நிலையில், தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழைக்காலங்களில்
பொதுமக்கள் மின் விபத்துகளில் சிக்குவதை தடுக்கும் வகையில்,
தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள்:
காற்று
மற்றும் மழைக்காலங்களில், டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள், மின்
கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில்
செல்லக்கூடாது. இவற்றின் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால், அணுகாமல்
உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், அதை தொடவோ, அருகில் செல்லவோ கூடாது.
ஊழியர்கள் வரும் வரை மற்றவர்கள் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இடி,
மின்னலின்போது, மின்சாதனங்கள், மொபைல் போன்
பயன்படுத்துவதையும், திறந்த ஜன்னல் மற்றும் கிரில் அருகே
நிற்பதையும் தவிர்க்க வேண்டும். ஈர கைகளுடன் சுவிட்சுகளை இயக்கவோ,
மின் சுவிட்சுகள் அருகே குழந்தைகளை விளையாடவோ அனுமதிக்க கூடாது.
மின்
விபத்துகளை தவிர்க்க, அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு
தடுப்பு கருவியை பொருத்த வேண்டும். இது மின்கசிவை கண்டறிந்து மின்
வினியோகத்தை உடனடியாக நிறுத்தி விபத்துகளை தடுக்கும். மின்தடை
புகார்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது உதவிகள் பெற, 'மின்னகம்'
நுகர்வோர் சேவை மையத்தை, 94987-94987 என்ற எண்ணில், 24 மணி நேரமும்
தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
