/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்வாரிய அலுவலகங்கள் இன்று முதல் இடமாற்றம்
/
மின்வாரிய அலுவலகங்கள் இன்று முதல் இடமாற்றம்
ADDED : ஆக 06, 2025 01:04 AM
ராசிபுரம், 'ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராசிபுரம் கோட்டம், உதவி கணக்கு அலுவலர் வருவாய் பிரிவு ராசிபுரம் அலுவலகம் தற்போது பட்டணம் ரோடு, ராமசாமி தோட்டத்தில் தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் இன்று முதல், ராசிபுரம் கவுண்டம்பாளையம் துணை மின் நிலைய வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. ராசிபுரம் கோட்டத்திற்கு அனைத்து பகுதி மின்நுகர்வோர்கள் புதிய விலாசத்தில் தொடர்புகொள்ள வேண்டும்.
இதேபோல், நாமகிரிப்பேட்டை-ஆத்துார் மெயின்ராட்டில் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த நாமகிரிப்பேட்டை உதவிப்பொறியாளர்-1 அலுவலகம், நாமகிரிப்பேட்டை துணைமின்நிலைய வளாகத்திற்கு இன்று முதல் மாற்றப்படுகிறது. நாமகிரிப்பேட்டை, அக்லாம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, தேவஸ்தானம்புதுார், தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துபள்ளம் ஆகிய பகுதி மின் நுகர்வோர்கள் மின்வாரிய தொடர்பான பணிகளுக்கு புதிய விலாசத்தில் மாற்றப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.