/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டம்
/
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டம்
ADDED : ஆக 06, 2025 01:05 AM
நாமக்கல், 'மனுக்களின் நிலவரத்தை தெரிந்துகொள்ள, 'டிராக்கிங்' சிஸ்டம் உருவாக்க வேண்டும்' என, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் தனியார் மண்டபத்தில் நடந்த, 8ம் ஆண்டு பேரவை கூட்டத்திற்கு, கிளை தலைவர் குப்பண்ணன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜெயமணி வரவேற்றார். மாநில செயலாளர் சம்பத்ராவ், மாநில துணை தலைவர் பெருமாள் ஆகியோர் பேசினர். அதில், தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும், கூடுதல் ஓய்வூதியம், 10 சதவீதம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், செலவு தொகை வழங்காமல் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக செலவுத்தொகை வழங்க வேண்டும். மனுக்களின் நிலவரத்தை தெரிந்துகொள்ள, 'டிராக்கிங்' சிஸ்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர் பணிக்காலத்தை சேர்த்து ஓய்வூதிம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

