/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
/
3ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
ADDED : ஆக 31, 2025 04:19 AM
நாமக்கல்:'நாமக்கல்லில்,
வரும், 3ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது' என,
நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல்
மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில்
மாதந்தோறும் புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, செப்., மாதத்திற்கான
குறைதீர்க்கும் முகாம், வரும், 3ல் நாமக்கல் செயற்பொறியாளர்
அலுவலகத்திலும் 10ல், ப.வேலுார் செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,
17ல், திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20ல்
பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 24ல், ராசிபுரம்
செயற்பொறியாளர் அலுவலகத்திலும், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
முகாமில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்
பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

