/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் மின்வாரிய தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
நாமக்கல்லில் மின்வாரிய தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2024 06:54 AM
நாமக்கல்: மின்வாரியம் தனியார் மையமாக்கலை கண்டித்து, நாமக்கல்லில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, டி.என்.இ.பி., பணியாளர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். அதில், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்; மின் வினியோக கம்பெனிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து போராடிவரும் சண்டிகர், உத்தரபிரதேச மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.
சி.ஐ.டி.யு., நாமக்கல் திட்ட தலைவர் சவுந்தர்ராஜன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் முருகேசன், செயலாளர் சசிகுமார், மண்டல செயலாளர் தண்டபாணி, திருச்செங்கோடு கோட்ட தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.