ADDED : ஜூலை 15, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம் அடுத்த ஒட்டமெத்தை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன், நேற்று காலை, மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தர செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், எஸ்.பி.பி., காலனி, வெப்படை, அக்ரஹாரம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், 60க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
