/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக்கிரமிப்பு கோவில் நிலம் ஹிந்து அறநிலையத்துறை மீட்பு
/
ஆக்கிரமிப்பு கோவில் நிலம் ஹிந்து அறநிலையத்துறை மீட்பு
ஆக்கிரமிப்பு கோவில் நிலம் ஹிந்து அறநிலையத்துறை மீட்பு
ஆக்கிரமிப்பு கோவில் நிலம் ஹிந்து அறநிலையத்துறை மீட்பு
ADDED : செப் 10, 2025 01:00 AM
மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது. மல்லசமுத்திரம் அருகே, செம்பாம்பாளையம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சர்வே எண், 66ல், 3.95 சென்ட் நிலம், தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது
. இந்நிலையில், நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் வழிகாட்டுதல்படி, நாமக்கல் உதவி ஆணையர் சுவாமிநாதன், நாமக்கல் தனி தாசில்தார் செந்தில்குமார், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.அதேபோல், மாமுண்டி கிராமம், லட்சுமி நாராயணபெருமாள் கோவிலுக்கு சொந்தமான பட்டா எண், 922ல், 4.98 ஹெக்டேர் அளவுள்ள நிலம் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இந்நிலங்கள், நேற்று மீட்கப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.