/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையின் குறுக்கே ஆக்கிரமிப்பு; தனியார் ஓட்டலுக்கு 'நோட்டீஸ்'
/
சாலையின் குறுக்கே ஆக்கிரமிப்பு; தனியார் ஓட்டலுக்கு 'நோட்டீஸ்'
சாலையின் குறுக்கே ஆக்கிரமிப்பு; தனியார் ஓட்டலுக்கு 'நோட்டீஸ்'
சாலையின் குறுக்கே ஆக்கிரமிப்பு; தனியார் ஓட்டலுக்கு 'நோட்டீஸ்'
ADDED : மே 09, 2024 06:40 AM
ப.வேலுார் : பொத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் சாலையின் குறுக்கே இரும்பு பாலம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்த தனியார் ஓட்டலுக்கு, டவுன் பஞ்., செயல் அலுவலர் யசோதா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அந்த நோட்டிஸில் தெரிவித்திருப்பதாவது: பொத்தனுார் டவுன் பஞ்., வார்டு எண், 5ல் வெங்கமேடு பகுதியில் தனியார் ஓட்டல் பின்பகுதியில் உள்ள டவுன் பஞ்.,க்கு சொந்தமான சிமென்ட் சாலையில், ஓட்டலில் இருந்து பணியாளர்கள் செல்லும் வகையில் சாலையை ஆக்கிரப்பு செய்து, இரும்பு கம்பிகளை கொண்டு ஆக்கிரமிப்பு செய்து பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சாலையில் பொதுமக்கள் நடந்தும், வாகனத்திலும் சென்று வர தடை ஏற்படுவதாக புகார்கள் வந்தன.
எனவே, இக்கடிதம் கிடைத்த, 7 நாட்களுக்குள், சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு கட்டுமானத்தை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்பிரிவுகளின் படி, முன்னறிவிப்பின்றி டவுன் பஞ்., மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, செலவின தொகையை தங்களிடமிருந்து வசூல் செய்யப்படும். மேலும், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.