/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: 2,670 பேர் விண்ணப்பம்
/
தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: 2,670 பேர் விண்ணப்பம்
தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: 2,670 பேர் விண்ணப்பம்
தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: 2,670 பேர் விண்ணப்பம்
ADDED : மே 28, 2024 07:09 AM
நாமக்கல்: கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளியில், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009ன் படி, சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்புகளில் குறைந்தபட்சம், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.அதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 1,974 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 2,670 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரே இடத்திற்கு போட்டி இருந்தால், குழுக்கல் முறையில் தேர்வு செய்வர். மாவட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயன், மரகதம், பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்வதற்கான முன்னேற்பாடு ஆயத்த கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் மரகதம் தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் விஜயன், பாலசுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டில், சேர்க்கைக்கு போட்டி இருப்பதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் போது, எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்வு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.