/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பு: ஆன்லைனின் விண்-ணப்பம் வரவேற்பு
/
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பு: ஆன்லைனின் விண்-ணப்பம் வரவேற்பு
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பு: ஆன்லைனின் விண்-ணப்பம் வரவேற்பு
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பு: ஆன்லைனின் விண்-ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 09, 2025 04:31 AM
நாமக்கல்: 'தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு, விருப்பம் உள்ள-வர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்-படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத், 'இ.டி.ஐ.ஐ.,' உடன் இணைந்து, 2024 முதல் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்-கத்திற்கான சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இந்த கல்வி பயின்று வருகின்றனர். இந்தாண்டும் சான்றிதழ் படிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் வரவேற்கப்படுகின்றன.
தொழில்முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள், இந்த படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இந்த படிப்பிற்கு, ஆண்டுக்கு, 80,000 ரூபாய் கட்டணம் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 21 முதல், 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள், ஐ.டி.ஐ.,யில் தொழிற்-கல்வி பயிற்சி முடித்தவர்கள் சேர தகுதியுடையவர்கள். இது தொழில்முனைவோர் குறித்த கல்வித்திட்டம். அதனால், தொழில்-முனைவோராக முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. விபரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அல்லது, 8668101638, 8668107552 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.