/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
/
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 23, 2025 02:12 AM
நாமக்கல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், பட்டதாரி பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், நான்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, பயிற்சியை துவக்கி வைத்தார். இதில், செய்முறை பயிற்சியின் முதல் நாளான நேற்று, திண்டுக்கல், புரூஸ்லீ பேக்கிங் ட்ரைனிங் சென்டர் நிர்வாகி ரோஷன் மெர்லின் பங்கேற்று, கேக், பிஸ்கட், பண், பீட்சா செய்வது எப்படி, அதற்கான மூலப்பொருட்கள் உபகரணங்கள், இயந்திரங்கள் குறித்து பயிற்சியளித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா, பட்டதாரி பெண்களுக்கு தொழில் முனைவோர் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் செய்முறை பயிற்சியளித்தார்.