sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிப்காட் திட்டம் கைவிடப்படும் விவசாயிகளிடம் இ.பி.எஸ்., உறுதி

/

சிப்காட் திட்டம் கைவிடப்படும் விவசாயிகளிடம் இ.பி.எஸ்., உறுதி

சிப்காட் திட்டம் கைவிடப்படும் விவசாயிகளிடம் இ.பி.எஸ்., உறுதி

சிப்காட் திட்டம் கைவிடப்படும் விவசாயிகளிடம் இ.பி.எஸ்., உறுதி


ADDED : ஜூலை 28, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளரு-மான இ.பி.எஸ்., திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை சந்-திப்பதற்காக, சேலத்தில் இருந்து கார் மூலம் நாமக்கல் வழியாக, நேற்று முன்தினம் திருச்சி சென்றார். நாமக்கல் - திருச்சி மெயின்-ரோட்டில் வளையப்பட்டி அருகே, 'சிப்காட்' எதிர்ப்பு குழுவினர் மற்றும் விவசாயிகள் அவரை சந்தித்து, அவருக்கு தென்னங்கன்று வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், 'நாமக்கல் மாவட்டத்தில் வளையப்பட்டி என்.புதுப்-பட்டி, அரூர் பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைவதை ரத்து செய்வதற்காக, மூன்றாண்டுகளாக பொதுமக்களும், விவசா-யிகளும் தொடர்ந்து போராடி வருகிறோம். 'சிப்காட்' தொழிற்-பேட்டை அமைவதை தடுத்து நிறுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட இ.பி.எஸ்., 'சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன், 'சிப்காட்' திட்டம் ரத்து செய்யப்படும்.

இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. உங்-களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் தங்கமணி செயல்ப-டுவார்' என, கூறி திருச்சி நோக்கி சென்றதாக விவசாயிகள் தெரி-வித்தனர்.






      Dinamalar
      Follow us