/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இ.பி.எஸ்.,ஐ முதல்வராக்க தீவிர பணியாற்ற அறிவுரை
/
இ.பி.எஸ்.,ஐ முதல்வராக்க தீவிர பணியாற்ற அறிவுரை
ADDED : நவ 09, 2025 03:32 AM
ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த பி.எல்.ஏ.,-2 என்ற பூத் ஏஜன்ட்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரேஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''தற்-போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இ.பி.எஸ்.ஐ., 2026 தேர்தலில் முதல்வராக்க வேண்டும். அதற்கான முக்கிய பணி உங்-களிடம் இருந்து தான் தொடங்குகிறது.
தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள, வாக்காளர் தீவிர திருத்த முகாம், தி.மு.க.,விற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், தகுதியான வாக்காளர்களின் பெயரை நீக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு விண்ணப்பங்களை கொடுப்பார்கள். விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து பூர்த்தி செய்து பார்த்து பின், ஒரிஜினலில் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதை நாம் செய்தாலே, 50 சதவீதம் தேர்தல் பணி முடிந்து விடும். வெளியூரில் வசிப்பவர்கள், அடையாளமே தெரியாமல் வெளியூரில் இருப்பவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். எனவே, பூத் ஏஜன்ட்கள் மிகவும் ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டும்,'' என்றார்.

