/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
/
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2025 01:04 AM
எக்ஸல் கல்வி நிறுவனங்களில்
சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
குமாரபாளையம், :குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிறுவன தலைவரும், பேராசிரியருமான நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக் ஆகியோர் வழிகாட்டுதல்படி, ஸ்ரீ ரெங்கஸ்வாமி கல்வி கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன் தலைமையேற்று, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், தொழில் நுட்ப வளாக செயல் இயக்குனர் பொம்மண்ணராஜா, இயக்குனர்கள் அன்பு கருப்புசாமி, கார்த்திகேயினிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவை, எக்ஸல் கல்வி நிறுவனங்களில் அமைந்துள்ள எக்ஸல் பொறியியல் கல்லுாரி, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி, எக்ஸல் பார்மசி கல்லுாரி, எக்ஸல் பிசியோ தெரபி மற்றும் ஆராய்ச்சி மையம், எக்ஸல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ், எக்ஸல் சித்த மருத்துவ கல்லுாரி, எக்ஸல் ஹோமியோபதி மருத்துவக்கல்லுாரி, எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி, எக்ஸல் செவிலியர் கல்லுாரி மற்றும் எக்ஸல் பப்ளிக் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் கொண்டாடினர்.