/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
/
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 03:52 AM
குமாரபாளையம்,: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், கல்லுாரி துணைத்தலைவர் மதன்கார்த்திக், எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனர் கவியரசி, தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து துறை வாரியாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக, கிராமிய பாடல், நடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.இதேபோல், எக்ஸல் பார்மசி கல்லுாரி, எக்ஸல் பிசியோதெரபி மற்றும் ஆராய்ச்சி மையம், எக்ஸல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ், எக்ஸல் சித்த மருத்துவக்கல்லுாரி, எக்ஸல் ஹோமியோபதி மருத்துவக்கல்லுாரி, எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி, எக்ஸல் செவிலியர் கல்லுாரி, எக்ஸல் பப்ளிக் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களிலும் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.