/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநகராட்சி கழிவுநீரால் துாசூர் ஏரி மாசு எருமப்பட்டி விவசாயிகள் புலம்பல்
/
மாநகராட்சி கழிவுநீரால் துாசூர் ஏரி மாசு எருமப்பட்டி விவசாயிகள் புலம்பல்
மாநகராட்சி கழிவுநீரால் துாசூர் ஏரி மாசு எருமப்பட்டி விவசாயிகள் புலம்பல்
மாநகராட்சி கழிவுநீரால் துாசூர் ஏரி மாசு எருமப்பட்டி விவசாயிகள் புலம்பல்
ADDED : ஜூலை 10, 2025 01:13 AM
எருமப்பட்டி, நாமக்கல் மாநகராட்சி கழிவுநீர் கலந்து துாசூர் ஏரி மாசடைந்துள்ளதால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எருமப்பட்டி யூனியன் துாசூரில், 250 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியிருந்த காலங்களில், ஏழு மதகுகள் மூலம் தண்ணீர் விசாயத்திற்கு திறந்து
விடப்பட்டு வந்தது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி, 223 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. கடந்தாண்டு கொல்லி
மலையில் பெய்த
கன மழையால் ஏரி நிரம்பி தண்ணீர் மதகுகள் மூலம் வெளியேறியது.
ஆனால், கடந்த
ஐந்தாண்டுக்கும் மேலாக, நாமக்கல் மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிக்காமல் அப்படியே ஏரியில் கலப்பதால் ஏரி மாசடைந்துள்ளது.
இதனால் மாசாடைந்த தண்ணீரில் விவசாயம் செய்வதை, அப்பகுதி விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த, ஐந்தாண்டு களுக்கு முன் வரை துாசூர் ஏரி தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தோம். ஆனால், சில ஆண்டாக ஏரியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்து மாசடைந்து வருவதால், அந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்வதை தவிர்த்துவிட்டோம்.
இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.