ADDED : செப் 18, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: ஈ.வெ.ரா.,வின், 146வது பிறந்த நாளையொட்டி, திருச்செங்கோடு நகர தி.மு.க., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு, நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட வக்கீல் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் அன்புமணி, நகர செயலாளர் சுகுமார், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தி.வி.க., ஆதிதமிழர் பேவை உள்ளிட்ட அமைப்பினர், ஈ.வெ.ரா., சிலை, உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.