பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த செயற்குழுவில் முடிவு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த செயற்குழுவில் முடிவு
ADDED : மே 06, 2026 05:03 AM
நாமக்கல்:தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம்
நாமக்கல்லில், நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை
வகித்தார்.
கூட்டத்தில், மத்திய அரசு ஊழியருக்கு, கடந்த, ஜன., 1 முதல்,
2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டதுபோல், தமிழக
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
வழங்க வேண்டும். த.வெ.க., தேர்தல் அறிக்கைப்படி, தமிழக ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த
வேண்டும். மோகனுார், நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றிய
ஆசியர்களின், ஏப்., மாத ஊதியத்தில், அதிரடியாக பறிக்கப்பட்டுள்ள
சிறப்புப்படி, 500 ரூபாய் மற்றும் 30 ரூபாய் ஆகியவற்றை, மே மாத
ஊதியத்தில் மீண்டும் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி,
நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.அதன்படி,
வரும், 8ல், மாவட்ட அளவில் சுவரொட்டி இயக்கம், 11ல், மாவட்ட கருவூலம்
முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம், 18ல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்
முன் மாலை நேர தர்ணா, 25 முதல், சி.இ.ஓ., அலுவலகம் முன் தொடர்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
