/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு
/
3 ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 04, 2025 01:25 AM
நாமக்கல், ஜன. 4-
தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷனின், 4ம் ஆண்டு துவக்க விழா, நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் எட்டிகன் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ராஜா, துணை செயலாளர்கள் எஸ்.குமார், சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் எஸ்.பி., தனராசு, ஏ.எஸ்.பி., ஆகாஸ் ஜோஷி, மாநில உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் தலைவர் ஜான் ஜார்லின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
விழாவில், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தாலுகா தலைவர் முன்னிலையில், உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். தலைவர், செயலாளர் இல்லாதபட்சத்தில், துணைத்தலைவர், துணை செயலாளர் தலைமையில் கூட்டத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் செல்வகுமார், மாநில, மாவட்ட, தாலுகா நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.