/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வில் விலக்கு: மாநில செயற்குழு முடிவு
/
2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வில் விலக்கு: மாநில செயற்குழு முடிவு
2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வில் விலக்கு: மாநில செயற்குழு முடிவு
2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வில் விலக்கு: மாநில செயற்குழு முடிவு
ADDED : அக் 02, 2025 02:22 AM
நாமக்கல், '2009க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் இருந்து விலக்களிக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் பிரஷித் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.சி.,யுமான முத்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் பழனியப்பன் கோரிக்கை குறித்து எடுத்துரைத்தார்.
கூட்டத்தில், கடந்த 1ல், உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இந்தியா முழுவதும் அரசு பள்ளிகளில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை பணிபுரியும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ள அனைத்து ஆசிரியர்களும், இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள் கட்டாய விருப்பத்தின் பேரில் பணியில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த தீர்ப்பால், நாடு முழுவதும், 60 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி, பணியில் சேர்ந்த ஆசிரிரியர்களுக்கு, இப்படி ஒரு நிபந்தனை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதில், தமிழக முதல்வர் நேரில் தலையிட்டு, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்துவதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு, என்.சி.டி.இ., வாரியத்தை வலியுறுத்த வேண்டும். தேவையானால், உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். வரும் லோக்சபா தொடரில், 2009க்கு முன், நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் இருந்து விலக்கு வழங்குவதை, சட்ட ரீதியாக உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில், ஏற்கனவே தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். அ.தி.மு.க., அரசால் ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.