/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் முகாம் அமைத்து சிகிச்சை
/
ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் முகாம் அமைத்து சிகிச்சை
ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் முகாம் அமைத்து சிகிச்சை
ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் முகாம் அமைத்து சிகிச்சை
ADDED : டிச 18, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டு, கண்கள் மூடியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள், ஆடுகள் வளர்த்து வருகின்றனர். சில நாட்களாக ஆடுகளுக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டு, கண்கள் மூடும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று வீரப்பம்பாளையம் பகுதியில் முகாம் அமைத்து, பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஊசி போடப்பட்டது.