/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரளிப்பூ விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
/
அரளிப்பூ விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
ADDED : செப் 09, 2025 02:16 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, அத்தனுார், கோம்பைக்காடு, தொட்டிய வலசு, பல்லவநாயக்கன்பட்டி, குட்டலாடம்பட்டி, தேங்கல்பாளையம், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குண்டுமல்லி, அரளி, ரோஸ், சாமந்தி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், அரளிப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பூக்கள் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் கடந்த வாரம் மழை காரணமாக, சாமந்தி பூ விளைச்சல் அதிகரித்தது. விசேஷ தினங்கள் இல்லாததால், சந்தையில் பூக்கள் விலை குறைந்தது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.