ADDED : நவ 25, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, : எருமப்பட்டி யூனியனில் உள்ள, 23 பஞ்., மற்றும் டவுன் பஞ்., பகுதியில் மறைந்த, தி.மு.க நிர்வாகிகளுக்கு, கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 'கலைஞர் குடும்ப நல நிதி' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அட்மா குழு தலைவர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். இதில், எம்.பி., ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, மறைந்த தி.மு.க., நிர்வாகிகள், 164 பேரின் குடும்பத்தினருக்கு, 'கலைஞர் குடும்ப நல நிதி' வழங்கினார்.

