ADDED : செப் 17, 2025 02:05 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, வடுகம் முனியப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த குப்பன் மகன் வெங்கடாசலம், 62; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லட்சுமிக்கும் நிலத்தராறு இருந்தது. இந்நிலையில், லட்சுமி தரப்பினர் நீதிமன்றத்தில், 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட நில அளவையாளர் மற்றும் போலீசார், கோர்ட் அமீனாக்கள் ஆகியேர் லட்சுமி நிலத்தை அளக்க சென்றனர்.
அப்போது, கோர்ட் அமீனாக்கள் நில அளவையாளர் உள்ளிட்டோரை வெங்கடாசலம் தடுத்துள்ளார். இதுகுறித்து, கோர்ட் அமீனா செல்வராஜ், நாமகிரிப்பேட்டை போலீசில் அளித்த புகார்படி, வெங்கடாசலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
டி.எஸ்.பி., ஆபீசில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
ப.வேலுார், செப். 17
ப.வேலுார் டி.எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மாலை ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, புலன் விசாரணையை மேம்படுத்துவது, பழைய குற்றவாளிகளை கண்காணிப்பது, துரிதமாக செயல்பட்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வழக்கின் மீதும் உள்ள உண்மை தன்மையை அறிந்து, காவலர்களாகிய நாம் கவனமாக செயல்பட வேண்டும் என, அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில், மரக்கன்று நட்டார். ஆய்வின்போது, நாமக்கல் எஸ்.பி., விமலா, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.