ADDED : நவ 28, 2026 07:19 AM
ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை
ஒன்றியம், தேங்கல்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 60;
விவசாயி. இவருக்கு மலர், 53, உட்பட மூன்று மனைவிகள் உள்ளனர்.
கோவிந்தராஜ், தன் மூன்றாவது மனைவி முத்துலட்சுமியுடன் தங்கி ஆடு,
மாடுகளை பராமரித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த, 21ல் கோவிந்தராஜ்,
மாட்டுக் கொட்டகையில் ஆடு, மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக எழுந்து
சென்றார். அப்போது, அவர் கட்டியிருந்த வேட்டி எதிர்பாராத விதமாக
கட்டிலின் குத்துக்காலில் மாட்டிக்கொண்டது. இதில் நிலைதடுமாறி
கீழே விழுந்ததில் அவரது இடது முழங்கால் மற்றும் பின்பக்க தலையில் பலத்த
அடிபட்டது.முதல் மனைவி மலர், கோவிந்தராஜை மீட்டு நாரைகிணற்றில்
உள்ள தனியார் கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு
அழைத்து சென்றார். தொடர்ந்து வலி ஏற்பட்டதால், சேலம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று
உயிரிழந்தார். ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
